செப்டம்பர் 29, சென்னை (Chennai News): வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப்பொறுத்தவரையில், தமிழ்நாட்டின் உள் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 29ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Pappammal: இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் மறைவு; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு அரபிக் கடலின் மேற்குப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரளா கடலோரப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், இவ்விடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகமாக வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இங்கே:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 28, 2024