அக்டோபர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். தற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
சென்னைக்கு அருகில் இன்று மாலைதாழ்வு மையம் வரலாம், நாளை மாலை நேரத்தில் புதுச்சேரி - ஆந்திர கடலோரப்பகுதி இடையே, சென்னைக்கு அருகில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் எச்சரிக்கை கொண்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை (Red Alert) இன்று விடுக்கப்பட்டுள்ளது. Velachery Bridge Parking: வெளுத்து வாங்கும் பேய் மழை; சென்னைக்கு ரெட் அலர்ட்.. கார் பார்க்கிங் ஏரியாவான வேளச்சேரி பாலம்.!
ஆரஞ்சு எச்சரிக்கை:
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் (Orange Alert), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
அதேபோல, இன்று காலை 10 மணிவரையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.