அக்டோபர் 15, வேளச்சேரி (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
ரெட் அலர்ட்: இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இன்று (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.16) அதி கனமழைக்கான நெட் அலர்ட்டும் (Red Alert) வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department) விடுத்துள்ளது. Chennai Corporation: சென்னை மக்களே! உங்கள் மண்டல கண்காணிப்பாளர் யார்?.. அவசர அழைப்பு எண்.. விபரம் இதோ.!
வேளச்சேரி பாலம்: வேளச்சேரி பொதுவாகவே தாழ்வான பகுதி என்பதால் தங்கள் கார்களை பாதுகாக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக பாலங்களின் (Velachery bridge flyover) மீது நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று (அக்.14 ) பிற்பகல் முதலே பாலத்தின் மீது கார்களின் அணிவகுப்பு தொடங்கியது. மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு உதவுமாறும், வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த பொதுமக்களுக்கு உதவுமாறும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி பாலத்தில் நிறுத்தப்படும் கார்கள்:
Velachery bridge ah parking ah matitanga 😂 Bayam irukadha pinna? pic.twitter.com/AdmQR0R8M3
— Bn Akash (@bn__akash) October 14, 2024