நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவிழந்து, பின் புயலாக வலுப்பெற்ற ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னையில் இருந்து 180 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 190 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 210 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்று பிற்பகல் நேரத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே ஃபெங்கால் புயல் (Fengal Puyal) கரையை கடக்கிறது.
தயார் நிலையில் அரசு:
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் நாகப்பட்டினம், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமிட்டு இருக்கிறது. புயல் நெருங்கும் தருவாய் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்கள், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு, மாநில/தேசிய பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் பணியாற்றி வருகிறது. Chennai Rains: நெருங்கி வரும் ஃபெங்கால் Fengal Puyal புயல்.. சென்னையில் கனமழை.. போக்குவரத்து நிறுத்தம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!
இன்றைய வானிலை (Today Weather):
இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அதிக கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கையும் (Red Alert), ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை (Rain for Next 3 Hours in Tamilnadu):
அதேபோல, இன்று காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி-மின்னல், தரைக்காற்றுடன் கனமழை பெய்யும். இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் இடி-மின்னலுடன் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.