நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவிழந்து, பின் புயலாக வலுப்பெற்ற ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னையில் இருந்து 180 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 190 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 210 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் (Fengal Puyal) இன்று பிற்பகல் நேரத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. Fengal Cyclone Live Tracker: ஃபெங்கால் புயலின் Fengal Puyal நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி? லைவ் அப்டேட் இதோ.!
தயார் நிலையில் அரசு:
புயல் கரையை கடக்க இன்னும் சில மணிநேரங்கள் இருப்பதால், வடகடலோர பகுதிகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பாதிப்பு ஏற்படவுள்ள மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் நகர்வுகளை நாம் Windy.com ல் நேரலையாக கூட காணலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய, மாநில மீட்புப் படையினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில் ஏற்படும் சேதம், வெள்ள நடவடிக்கையை கண்காணித்து உடனுக்குடன் செயல்படவும் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
மின்சாரம் துண்டிப்பு:
இதனிடையே, சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் புயல் கரையை நெருங்கும் சமயத்தில் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொள்வர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், திருக்கழுக்குன்றம், சென்னை மற்றும் செங்கல்பட்டு கடலோரத்தில் இருக்கும் மீனவ கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போதே காற்றின் வேகத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தால், படிப்படியாக மின்சாரம் பிற பகுதிகளிலும் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் வழக்கம்போல சேவை:
புயலின் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களில் பணியற்றுவோரில், வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் சென்னை மாநகர பேருந்துகள் இயக்கம், மெட்ரோ இரயில்கள், புறநகர் இரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் அசௌகரியம் இன்றி பயணிக்கலாம். புயல் நெருங்கும் வேளையில் அதிக காற்றுடன் கூடிய மழை, மின்சார பிரச்சனை போன்றவை ஏற்பட்டால், இரயில் மற்றும் பேருந்து சேவையில் சிலமணிநேரம் மட்டும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.