மார்ச் 01, தாம்பரம்: சென்னையில் உள்ள தாம்பரம் (Tambaram, Chennai), இரும்புலியூர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் செல்போன் பேசியபடி நடந்து சென்ற பெண்மணி, அவ்வழியே குருவாயூர் நோக்கி (Chennai Egmore–Guruvayur Express) பயணம் செய்த இரயில் மோதியதில் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தாம்பரம் இரயில்வே (Tambaram Railway Police) காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண்மணி யார்? என்ற விசாரணை அதிகாரிகளால் நடத்தப்பட்டு வந்தது.
விசாரணையில், கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லத்தை (Kollam, Kerala) சேர்ந்தவர் நிகிதா. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் (College Student) தங்கியிருந்தவாறு, அங்குள்ள தனியார் கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்துள்ளார். அவர் பகுதி நேரமாக வேலை பார்க்க முடிவெடுத்து, ஆசிரியர் பணிக்காக தேர்வும் செய்யப்பட்டுள்ளார். Cable Office Gun Firing: கேபிள் நிறுவனத்திற்குள் புகுந்து சிறார்கள் துப்பாக்கிசூடு… டெல்லியில் பரபரப்பு சம்பவம்.!
சம்பவத்தன்று அவர் கிடைத்த வேலையில் முதல் நாள் பணியில் சேருவதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, செல்போனில் பேசியபடி இரும்புலியூர் இரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அச்சமயம் அவ்வழியே குருவாயூர் (MS Guruvayur Express) நோக்கி அதிவிரைவு வண்டி பயணிக்க, இதை அறியாமல் போனில் பேசியபடி நிகிதா சென்றுள்ளார்.
அப்போது, அதிவிரைவு இரயில் மோதியதில் நிகிதா நிகழ்விடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார் என்பது அம்பலமானது. இரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்க வேண்டாம் என அதிகாரிகள் இரயில் நிலையங்களில் தொடர்ந்து பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அலட்சியமான செயல்களால் விபத்துகள் தொடர்கதையாகியுள்ளன.