நவம்பர் 13, சென்னை (Chennai News): இந்தியா போன்ற பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் நாட்டில், தங்கம் மீதான ஈர்ப்பு என்பது மிகப்பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது. குழந்தை பிறப்பில் தொடங்கி இறப்பு வரை அன்பளிப்பு, மொய் வசூல் என ஒவ்வொரு சுப-துக்க நிகழ்ச்சியிலும் இடம்பெறும் ஆபரணமாகவும் தங்கம் கவனிக்கப்படுகிறது. இந்த தங்கம் வெளிநாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 1900ம் ஆண்டுகளில் தங்கம் வணிக ரீதியான அறிமுகமானத்தில் இருந்து, தற்போது வரை பன்மடங்கு விலை உச்சத்தை சந்தித்து இருக்கிறது. அதன் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக, தங்கத்தின் விலை என்பது உச்சக்கட்டத்தில் இருக்கிறது. நாளைய வானிலை: இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டும் மழை.. நவ.17 முதல் விளாசப்போகும் கனமழை.!
தங்கம் விலை உயர்வு (Gold Price High Reasons):
உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை என்பது இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் முடிவு செய்யப்படுகிறது. இத்துடன் தங்கத்தின் விலை உள்நாட்டு வர்த்தக மையத்தின் ஏற்ற-இறக்கத்தைப் பொறுத்து மாறுபடும். கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று சவரனுக்கு ரூ.97,000 என்ற உச்சத்தை தொட்டு இருக்கிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,97,000 என்ற உச்சத்தை சென்றடைந்து தற்போது இறங்கு முகத்தில் இருக்கிறது. பங்குசந்தைகளில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகளும் விலை விண்ணை முட்ட காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்து, ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை இன்று ரூ.200 உயர்ந்து, ரூ.11,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.9000 உயர்ந்து ரூ.1,82,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.