ஜூன் 03, சென்னை (Chennai): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து சென்னை (Kolkata To Chennai Express) நோக்கி புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு (Coromendal Superfast Express) இரயில், கர்நாடக மாநிலத்தில் உள்ள யஷ்வந்த்பூரில் இருந்து ஹௌரா (Yeswanthpur to Howrah Express) நோக்கி பயணித்த துரந்தோ விரைவு இரயில், சரக்கு இரயில் ஆகியவை ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இரயில் பெட்டிகள் தடம் புரண்டு, ஒன்றோடொன்று மோதிக்கொண்டதால் (Train Accident) பயங்கர சேதம் ஏற்பட்டது. இரயில் விபத்தில் தற்போது வரை 238 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 900-க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரயிலில் பயணித்தவர்கள் உறவினர்கள் தகவல் அறிய இரயில்வே துறையின் கட்டுப்பாட்டு எண் 182, 033- 22143526/ 22535185 உட்பட பல எண்களுக்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களும் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்துள்ளனர். WHO on Chicken: சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை… உலகளவில் கொடூரமான பத்தாவது நோய் ஏற்படும் – அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
இதனால் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ் சிவசங்கர் ஆகியோர் தலைமையிலான குழு இன்று விபத்து நடந்த ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதிக்கு செல்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா அரசிடம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் மீட்பு & மருத்துவ பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரடியாக விரைந்து சென்ற மத்திய இரயில்வே அமைச்சர் வைஷ்ணவ், மீட்பு பணிகள் நிறைவடைந்ததும் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி, காயமடைந்தோருக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அறிவித்து இருக்கிறார். AI Drone Killed Human: சோதனையில் மனிதரை கண்மூடித்தனமாக இரக்கமின்றி கொன்ற செயற்கை நுண்ணறிவு டிரோன்.. உத்தரவை மீறத்துடிக்கும் AI..!
விபத்தில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள், காயமடைந்துள்ளனர் என்ற தகவல் விரைவில் அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தங்களின் உறவினர்கள் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து ஒடிசா செல்லவுள்ள தமிழர்களுக்காக இன்று மாலை சிறப்பு இரயில் சென்னையில் இருந்து புறப்படுகிறது.
அந்த இரயிலில் பயணிக்க விரும்புவோர், தங்களின் உறவினர்களின் விபரத்தை தெரிவித்து இரயில் முன்பதிவு சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.