
மார்ச் 07, நெல்லை (Tirunelveli News): தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மைதீன்-தாஹாபீவி. இவர்களது மகன் முகமது ஆரிப் (வயது 8). அங்குள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவன் விளையாடிய போது பம்பர ஆணி ஒன்றை விழுங்கி விட்டார். அது அவனது இடது மூச்சுக் குழாயில் சிக்கியது. இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறினார். Teacher Stabbed: ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு கத்திக்குத்து.. வாலிபர் வெறிச்செயல்..!
நவீன சிகிச்சை அளித்து சாதனை:
இதனையறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக அவனை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் ரேவதி பாலன் ஆலோசனை படி, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பில் காது, மூக்கு, தொண்டை துறை பிரிவு தலைவர் ரவிக்குமார் தலைமையில் மருத்துவர்கள் ராஜ்கமல் பாண்டியன், பிரியதர்ஷினி, முத்தமிழ் சிலம்பு, மயக்கவியல் துறை தலைவர் சீனிவாசன், மருத்துவர் தயூப் கான், அபிராமி ஆகியோர் நவீன சிகிச்சை மூலம் 30 நிமிடங்கள் மேற்கொண்டு வெற்றிகரமாக சாதனை படைத்தனர். மருத்துவ குழுவினரை மருத்துவர் டீன் ரேவதி பாலன் பாராட்டினார்.
ரிஜிட் பிராஞ்ஜோஸ்கோபி:
இதுகுறித்து, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மருத்துவர் ரவிகுமார் கூறுகையில், சிறுவன் ஆரிப் விழுங்கிய ஆணி இடது மூச்சுக்குழாய் வழியாக சென்று நுரையீரல் பகுதியில் சிக்கி இருந்தது 'ரிஜிட் பிராஞ்ஜோஸ்கோபி' (Rigid Bronchoscopy) என்ற நவீன கருவி மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த கருவி மூலம் சிறுவனின் நுரையீரல் பகுதியில் சிக்கி இருந்த ஆணியை அகற்றியபோது, சிறுவன் மூச்சு விடுவதற்காக ஆக்ஸிஜனை குறிப்பிட்ட அளவு கொடுத்து, அடுத்த 20 வினாடி இடைவெளியில் ஆணி வெளியே எடுக்கப்பட்டது எனக் கூறினார்.