
மார்ச் 06, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டம், மதுரா நகர் டெலிகாம் நகர் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 62). இவரது மனைவி நிர்மலா (வயது 60), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (வயது 24) என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் குடும்பத்திற்கும், ஏற்கனவே முன் விரோதம் (Family Dispute) இருந்து வந்துள்ளது. ஆபாச புகைப்படம், வீடியோ பார்த்தால் கடும் நடவடிக்கை.. 13 ஆயிரம் பேருக்கு காவல்துறை எச்சரிக்கை..!
சரமாரி கத்திக்குத்து:
இந்நிலையில், இன்று (மார்ச் 06) காலை வீட்டு வாசலில், நிர்மலா கோலம் போட்டு கொண்டிருந்த போது, வாலிபர் கத்தியைக் கொண்டு 15க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த அவரது கணவர் மாதவனையும் அவர் கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக, மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.