செப்டம்பர் 06, சோழவந்தான் (Thanjavur News): தஞ்சாவூர் (Tanjaore) மாவட்டத்தில் உள்ள சோழபுரம் (Cholapuram) காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க, நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதனால் காவல் துறையினர் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில், புதிய காவல் நிலைய வளாகம் அமைக்க தேவையான இடத்தை பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் ஷாஜகான் என்பவருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது. Government Schemes: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார பம்புசெட்.. விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் தானம்:
தனது ஊரின் எதிர்காலத்திற்க்கும், பாதுகாப்புக்கும் முக்கிய காரணமாக இருக்கும் காவல் நிலையத்திற்கு, புதிய கட்டிடம் அமைக்க தனது நிலத்தை வழங்க முன்வந்தவர், அதனை முற்றிலும் தனமாக அரசுக்கு கொடுத்து இறக்கிறார். சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை, அவர் காவல் நிலைய வளாகம் அமைக்க தாமாக முன்வந்து தானம் செய்துள்ளார்.
அதிகாரிகள் மகிழ்ச்சி & மரியாதை:
இதுதொடர்பான தகவலை முன்னதாகவே அதிகாரிகளிடம் கூறி இருந்தவர், தனது திருமண நாளான நேற்று, முறைப்படி ஆவணங்களை பதவு செய்து சோழவந்தான் காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தார். ஷாஜகானின் செயலை கண்டு வியந்துபோன திருவிடைமருதூர் டிஎஸ்பி உட்பட காவல் அதிகாரிகள், அவருக்கு சால்வை அணிவித்து தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
காவல் நிலையத்திற்கு தனது ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஷாஜகான்:
2 கோடி மதிப்புள்ள நிலத்தை காவல்நிலையம் கட்ட தானமாக வழங்கிய தாராள மனசுக்காரர்.. அகமகிழ்ந்து காவலர்கள் திருப்பி செய்த செயல்..!#Thanjavur | #Police | #PoliceStation | #Land | #PolimerNews pic.twitter.com/GQnKzYe20x
— Polimer News (@polimernews) September 6, 2024
வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி