Girl Sexual Abuse (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 29, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி என்பவர் ஓவிய கலைப்பிரிவு ஆசிரியராக (Drawing Teacher) பணிபுரிந்து வந்துள்ளார். Question Paper Leak: பி.எட் தேர்வுகள் வினாத்தாள் கசிவு?.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடவடிக்கை.!

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவிய ஆசிரியர் ராமசந்திர சோனி தன்னிடம் பாலியல் சீண்டலில் (Sexual Abuse) ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை மகளிர் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் தான் தவறாக நடந்துகொள்ளவில்லை எனவும், மாணவியிடம் சாதாரணமாக பழகியதாகவும் தெரிவித்தார். பின்னர், சம்மந்தப்பட்ட மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர் ராமசந்திர சோனி தனது கையை தொட்டும், இழுத்தும் தொந்தரவு அளித்ததாக மாணவி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ராமசந்திர சோனி மீது போக்சோ (Pocso Act) வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.