Indigo Flight (Photo Credit: Wikipedia)

நவம்பர் 30, மீனம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெங்கால் புயலின் (Fengal Cyclone) தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை மேகங்கள் சூழ்ந்து, மழைப்பொழிவு மற்றும் பலத்த தரைக்காற்று அதிகரித்து இருக்கிறது. ஃபெங்கால் புயல் (Fengal Cyclone) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் ரிவிக்கப்பட்டுள்ளது. Fengal Cyclone Clouds in Chennai: சென்னையை சுத்துப்போட்ட புயல் மேகங்கள்; அசத்தல் 3டி காட்சிகள் இங்கே.! 

இண்டிகோ விமான சேவை ரத்து:

இந்நிலையில், புயலின் தாக்கத்தால் சென்னையில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது தாமதம் அடைந்த நிலையில், புயல் கரையை கடக்கும்போது சிலமணிநேரம் முற்றிலும் விமான சேவை ரத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, இண்டிகோ (Indigo) விமான சேவையானது, தற்காலிகமாக சென்னையில் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக நேற்றே 13 விமான சேவைகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. புயலின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ (Indigo Flights Service) நிறுவன விமான சேவையின் புறப்பாடு/வருகை என அனைத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் முன்பதிவு தேதி மாற்றம் அல்லது கேன்சலிங்-ரீபண்ட் முறையில் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து தொடர்பாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு: