நவம்பர் 12, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக (Tamilnadu Chief Electoral Officer) பணியாற்றி வந்த சத்யப்பிரதா சாஹு (Satyabrata Sahoo), விலங்குகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை (Archana Patnaik) தேர்வு செய்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் (Election Commission Of India) உத்தரவு பிறப்பித்தது. இதன் வாயிலாக அர்ச்சனா பட்நாயக், சுதந்திரம் அடைந்த இந்தியாவில், தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த 2002ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவில், ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் தேர்வு செய்யப்பட்டு, பல மாநிலங்களில், பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். The GOAT & Vettaiyan: பள்ளியில் திரையிடப்பட்ட தி கோட், வேட்டையன் படங்கள்; நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.!
முறைப்படி பொறுப்பேற்றார்:
கடந்த 2018ம் ஆண்டு முதல் சத்யபிரதா சாஹு தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அர்ச்சனா பட்நாயக் அப்பொறுப்பை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டார். இவர் முன்னதாக தமிழ்நாடு அரசின் சிறு-குறு தொழில்துறை செயலராகவும் பதவி வகித்து இருக்கிறார். ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவராகவும், கோவை - நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் திறம்பட பணியாற்றி இருக்கிறார். கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியரும் இவர்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 - 2020 காலங்களில் இவர் ஒடிசா மாநிலத்தில் நீர்வளத்துறையில் சிறப்பு பிரிவு தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.