
பிப்ரவரி 27, சென்னை (Health Tips): கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால், மற்ற நேரங்களைக் காட்டிலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனால் உடலிற்கு தேவையான நீரின் அளவு குறைந்துவிடும். இதனால் வெயில்காலத்தில் மயக்கம், சருமப்பிரச்சனைகள் போன்ற பல நோய்களும் ஏற்படும். இவைகளை சமாளிக்க கோடைக்கு ஏற்ற சீரான உணவு முறைகளுடன் அதிக தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. Peas Kachori Recipe: சுவையான பட்டாணி கசோரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
நீரின் அருமை அறிவாய் கோடையிலே..
- வழக்கமாக குடிக்கும் நீரின் அளவை விட அதிக அளிவிலேயே நீரை அருந்த வேண்டும்.
- தண்ணீர் பாட்டில் எங்கு சென்றாலும் கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.
- உடலைச் சூடாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- நார்சத்து மிகுந்த பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
- காலையில் எழுந்தவுடன் உடலில் நீர்சத்து குறைவாக இருக்கும். அதனால் போதிய தண்ணீர் அருந்துவது தேவையில்லாத கழிவை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும்.
- தண்ணீரை ஒரே நேரத்தில் மொத்தமாக குடித்து விடாமல் அவ்வப்போது குடிக்க வேண்டும்.
- தாகம் எடுக்காவிடினும் உடலுக்கு நீரை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- தாகம் எடுக்கையில் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் மற்ற நேரங்களில் பழச்சாறுகளை அருந்தலாம். ஏனெனில் தாகம் எடுக்கையில் பழச்சறுகளை குடிப்பதால் எலும்புகள் வலுவிழக்கவும், சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்புள்ளது.
- கோடையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், உடற்பயிற்சி மேற்கொள்வோர்களும் தண்ணீர் அடிக்கடி குடிப்பது நல்லது.
- மனிதர்களைப் போன்றே மற்ற உயிரினங்களுக்கும் வெப்பத்தினால் தண்ணீர் அதிகம் தேவைப்படும். தங்களால் முடிந்த அளவு விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்.