AIADMK Leaders Meet with TMC Party President GK Vasan

ஜனவரி 19, சென்னை: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு (Erode East) தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவெரா (Congress Party MLA Thirumagan EVRa) 67,300 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கூட்டணிக்கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் (TMC Party) சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தலுக்கான (By Poll) வாய்ப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும், மார்ச் மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனையடுத்து, இடைத்தேர்தலுக்கு தயாராக அரசியல் கட்சிகள் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக சார்பில் த.மா.கா கடந்த தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைத்து தேர்தலை சந்தித்தனர்.

இந்த நிலையில், மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள த.மா.கா போட்டியிடுமா? அல்லது அதிமுகவே களமிறங்குகிறதா? என் பேச்சுவார்த்தைகள் எழத்தொடங்கியது. இதுகுறித்து இருகட்சியினரும் ஆலோசனை நடத்தி வந்தனர். Sean Bridon Jack: ஆப்பிரிக்க நகைச்சுவை குழு நடிகரின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (AIADMK Jayakumar) தலைமையிலான குழு, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) ஆலோசனையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனை (GK Vasan), அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜி.கே வாசன், "நானும் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பேசியிருந்தோம். கூட்டணிக்கட்சிகளோடு ஆலோசனை நடத்தப்படும்.

அடுத்த 2 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். அதிமுக - த.மா.கா உறவு என்பது சுமூகமாக நீடிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்வது கூட்டணிக்கட்சியின் கடமை. அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).