நவம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெங்கால் புயல் (Fengal Cyclone), முதலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி, புயலாக வலுப்பெற்று பின் வலுவிழந்தது. அதனைத்தொடர்ந்து, ஒருநாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஃபெங்கால் புயல் (Fengal Puyal) வலுப்பெற்று, மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. புயல் தொடர்ந்து தமிழகம் (Tamilnadu Rains) நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதன் வேகம் அதிகம், குறைவு என போக்கு காண்பித்து வருகிறது.
மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கும்:
இந்நிலையில், புயல் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயலின் வேகம் அதிகரித்து இஇருப்பதால், இன்று மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் நேரத்தில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த வேளையில், தற்போது மாலை நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை: இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; காலை 10 மணிவரை இங்கும் மழை.. முழு விபரம் இதோ.!
திசை லேசாக மாற்றம்:
புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், புதுச்சேரிக்கு வடக்கு திசையில் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன் திசை மாறியுள்ள நிலையில், புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் கடந்த 12 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து 150 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 140 கிமீ தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது.
பலத்த காற்று:
புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும், மயிலாடுதுறை, தஞ்சை உட்பட பிற மாவட்டங்களில் 70 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.