டிசம்பர் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று, நேற்று மாலை 05:30 மணிக்கு மேல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு வடக்கே, மரக்காணம் பகுதியை மையமாக வைத்து கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் நேற்று சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்து, நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியது. அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு 9 மணிக்கு மேல் புயல் முழுவதும் கரையை கடந்தாலும், வங்கக்கடலை ஒட்டிய புதுச்சேரி பகுதியில் புயல் நகர்வற்று நின்றது. இதனால் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி மாவட்டங்களில், நேற்று இரவு 7 மணிக்கு மேல் தொடங்கிய மழை, விடிய-விடிய கொட்டித்தீர்த்து, விடிந்தும் தொடர்ந்து பெய்தது. Namakkal Accident: காலையில் நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு சோகம்.. ஆம்னி கார் மோதி மூவர் மரணம்.!
விழுப்புரம், புதுச்சேரியில் பெரும்மழை:
நேற்று சுமார் 11 மணிக்கு மேல் வங்கக்கடலில் இருந்து கரையை கடந்த நிலையில், கடலுக்கு அருகே தொடர்ந்து நீடித்து வந்ததால், புயலின் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்தது. 01 டிசம்பர் 2024 மதியம் 2 மணிக்கு மேல் மேற்கூறிய மாவட்டங்களில் மழை குறைந்தது. இந்நிலையில், பெஞ்சல் புயலானது வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு திசை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழக்கும். இரவு நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவையில் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை Windy.com ல் கவனியுங்கள்..