டிசம்பர் 21, சென்னை (Chennai): கடந்த 2006 முதல் 2011 வரை, திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர். PM Modi Statue Kissed: காஷ்மீரின் பெர்ன் உடைகள் தினம்... உற்சாகத்துடன் பிரதமர் மோடியின் சிலைக்கு முத்தம் கொடுத்த நபர்..!
பறிபோன பதவி: மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 50 லட்சம் அபராதம் விதித்தது. இந்த தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார்.
உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு: இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துவரும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு (TN Minister Rajakannappan), பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறையும் கூடுதல் பொறுப்பாக வழங்க பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.