Ku Ka Selvam (Photo Credit: @234seconds X)

ஜனவரி 03, சென்னை (Chennai): திமுக கட்சியின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தவர். இவர் 2016ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். இவர் நேரடி அரசியலில் இருந்து சில ஆண்டுகாலமாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் போரூர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கு.க. செல்வம் இன்று உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் காலமான செய்தி திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. Ayodhya Train: அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கம்... ரயில்வேத் துறை அறிவிப்பு..!