Yoshitha Rajapaksa | Mahinda Rajapaksa (Photo Credit: @SriLankaTweet / @colombogazette X)

ஜனவரி 25, கொழும்பு (World News): இலங்கை நாட்டின் முன்னாள் அதிபராக பொறுப்பு வகித்து வந்தவர் மகிந்த ராஜபக்சே (Mahinda Rajapaksa). இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைக்கு பின்னர், மகிழ்ந்த ராஜபக்சே அரசு கவிழ்ந்து, அவர் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதனைத்தொடர்ந்து, அங்கு மக்கள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அனுர குமார திஸநாயக்கே (Anura Kumara Dissanayake), தேர்தலை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றி அடைந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார். IND Vs ENG 2nd T20i: சேப்பாக்கத்தில் இன்று இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி.. நேரலையை பார்ப்பது எப்படி? சேப்பாக்கம் செல்வோருக்கு டிப்ஸ்.! 

யோஷித ராஜபக்சே kaithu (Yoshitha Rajapaksa Arrested):

இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே (Yoshitha Rajapaksa) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துகுவிப்பு வழக்கில், இலங்கை குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 25 வயதாகும் யோஷித, இன்று பேலியாட்டா நோக்கி பயணம் செய்தபோது, அதிகாரிகள் அவரை நடுவழியில் மடக்கி கைது செய்துள்ளனர். இலங்கை அரசியலில் மிகப்பெரிய புள்ளியாக இருந்து வந்த ராஜபக்சே, தனது பதவிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக பல விஷயங்களை மேற்கொண்டு இருக்கிறார். இன்று அவரின் மகன் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.