MK Muthu Passed Away (Photo Credit : @chnmharish / @sunnewstamil X)

ஜூலை 19, சென்னை (Chennai News): மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. இவர் தமிழ் திரையுலகில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தமிழக மக்களிடையே பரிச்சயமானவர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த மு.க.முத்து, கலைஞரின் கலை உலக வாரிசாக கருதப்பட்டார். சமையல்காரன், அணையா விளக்கு என அன்றைய காலங்களில் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். Gold Rate Today: தாறுமாறாக உயரும் வெள்ளி.. டஃப் கொடுக்கும் தங்கம்.. கிடுகிடு உயர்வு.! 

வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் மு.க.முத்து :

கருணாநிதியின் தீவிர அரசியலுக்கு பின்னர் திரையுலகில் இருந்தும் விலகிக்கொண்டார். இந்த நிலையில், மு.க.முத்து தனது 77 வயதில் ஈஞ்சம்பாக்கத்தில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவு திமுக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் இரங்கல் :

மறைந்த மு.க.முத்துவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மூத்த சகோதரரின் உடலைக்கண்ட முதல்வர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து திமுக நிர்வாகிகள் பலரும் மு.க.முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்து கொண்டிருக்கின்றனர்.