ஆகஸ்ட் 20, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி வேலு - சசிகலா. வேலு அப்பகுதியில் நெசவு தொழில் செய்து வருகிறார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இதில், நான்கரை வயது மகன் ஜோகித், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். சிறுவனுக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். Viral Video: 2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய்.. உயிர்காத்த காக்கி தெய்வங்கள்.!
தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுவன் பலி:
இதனையடுத்து, மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து, மாத்திரை கொடுத்துள்ளனர். பின்னர், சிறுவனின் தாயார் அன்றிரவு பாதி மாத்திரை கொடுத்துள்ளார். உடைத்து கொடுக்கப்பட்ட பாதி மாத்திரை சிறுவனின் சுவாச குழாயில் சிக்கிக்கொண்டது. இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டு, பரிதாபமாக (Child Death) உயிரிழந்தார். தனது மகன் உயிரிழந்ததால் பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.