Baby Rescued from Candy Choking on Train (Photo Credit : @SalemDRM X)

ஆகஸ்ட் 19, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமோ ரயிலில் ஆகஸ்ட் 15-ஆம் தேதியான நேற்று தாய் ஒருவர் தனது 2 வயது தேவ் ஆதிரன் என்ற மகனுடன் பயணம் செய்தார். அங்கு சிறுவன் ரயிலில் விற்பனை செய்யப்பட்ட மிட்டாய் ஒன்றை வாங்கி சாப்பிட்டதாக தெரிய வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தொண்டைக்குள் சிக்கிய சாக்லேட் காரணமாக, அவர் மூச்சடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கிறார்.

உதவிக்காக அலறிய தாய் :

இதனால் பதறிப்போன பெண்மணி உதவிக்காக அலறி இருக்கிறார். இதனை அடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே காவல் அதிகாரியான சுனில் குமார் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சஜனி ஆகியோர் சேர்ந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் சிறுவன் நலம் பெற்ற நிலையில், உடனடியாக அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதி செய்யப்பட்டார். Chennai News: காவல் உதவி ஆய்வாளர் விபரீத முடிவு.. மகளின் அதிர்ச்சி செயலால் துயரம்.!  

குவியும் பாராட்டுக்கள் :

அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினர். இந்த செயலை செய்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு காவலர்கள் சிறுவனின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

2 வயது சிறுவனை ரயில்வே போலீசார் காப்பாற்றிய வீடியோ :