Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 23, சென்னை (Gold Price Today): தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும்.

தங்கம் விலை ஒரேநாளில் 2 முறை உயர்வு :

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ.81,000 கடந்து புதிய உச்சத்தை தொட்ட சவரன் தங்கம் விலை ரூ.90,000ஐ நோக்கி பயணித்து வருகிறது. செப்டம்பர் 23ஆம் தேதியான இன்று காலை தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் உயர்ந்துள்ளது. நாளைய வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு மிரட்டப்போகும் வானிலை.. கனமழை எச்சரிக்கை.! 

இன்று காலை தங்கத்தின் விலை :

இன்று காலை 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,500 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.84,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,49,000க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை பிற்பகலில் மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :

அதன்படி 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,50,000க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரேநாளில் இரண்டு முறை ரூ.1,680 உயர்ந்து தங்கப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).