Gold Silver Price (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடிக்கும் போர், பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள், தங்கம்-வெள்ளியின் தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை எதிர்பார்ப்பு நிலவரம் உட்பட பல்வேறு காரணிகள் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கம்-வெள்ளியின் விலை (Gold Silver Rate Today) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம், வெள்ளி விலை என்பது கணிசமான தொகை குறைந்து இருந்தது. ஆனால் தங்கமும், வெள்ளியும் 2025ல் போட்டிபோட்டு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் இருந்து தற்போது ரூ.1,80,000 என்ற விலை உச்சத்தை சந்தித்துள்ளது.

தங்கம்-வெள்ளி விலை உயர காரணம் என்ன? (Gold Silver Rate):

உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி புதிய அத்தியாயத்தில் பயணம் செய்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையில் தினமும் கிடைக்கும் அளவில் பாதிக்கும் மேல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொள்முதல் அதிகமானதால் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. Breaking: தங்கத்தை விடுங்க பாஸ்.. 2 நாளில் ரூ.14,000 உயர்ந்த வெள்ளி.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.11,425 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.3000 உயர்ந்து 1 கிலோ வெள்ளி ரூ.1,87,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரியம், கலாச்சார அடையாளமாக தங்கம், வெள்ளி பொருட்கள் பார்க்கப்படுகின்றன. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.