Gold Rate Today: ரூ.76,000ஐ கடந்தது தங்கம் விலை.. ஒரேநாளில் வரலாறு காணாத புதிய உச்சம்.. கிடுகிடு உயர்வு.. ஷாக் நிலவரம்.!
சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.76,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் 29, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வானிலை: சில்லென மாறிய வானிலை.. தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.!
தங்கம் விலை அதிரடி உயர்வு :
தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வானிலை: கோவை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம் என்ன?.!
இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :
இன்று காலை (ஆகஸ்ட் 29) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,470 க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலையானது பிற்பகலில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராம் தங்கம் ரூ.9,535 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,31,000 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ரூ.76,000ஐ கடந்து விற்பனையாவது தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 29, 2025 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

