Cough Syrup (Photo Credit :@Pexels X)

அக்டோபர் 03, சிந்த்வாரா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாராவில் 1 முதல் 7 வயது உட்பட்ட ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட் ரிப் (Coldrif) மருந்தும், மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் (Nextro-DS) மருந்தும் சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

குழந்தைகளின் சிறுநீரக திசுவில் ரசாயனம் :

குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெயிண்ட் மற்றும் மை ஆகியவை தயாரிக்க டை எத்திலின் ரசாயனம் பயன்படுத்தப்படும் நிலையில், இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டதன் மூலம் குழந்தைகள் உயிரிழந்தனவா?, இருமல் மருந்துகளில் இந்த ரசாயனம் கலந்து இருக்க வாய்ப்புள்ளதா? எனும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Gold Rate Today: போக்குக்காட்டும் தங்கம், வெள்ளி விலை.. காலை குறைந்து மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.!

மத்திய அரசு விசாரணை குழு தீவிரம் :

இதனிடையே மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச அரசு பல் துறை விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அதன்படி உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான தினேஷ்குமார் மவுரியா, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 13 பேட்ச் கோல்ட் ரிப் மருந்தை சோதனைக்கு உட்படுத்துமாறு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் எஸ்.குருபாரதி தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

கோல்ட் ரிப் மருந்துக்கு தடை :

ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மறு உத்தரவு வரும் வரை கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல நெக்ஸ்ட்ரோ டிஎஸ் தமிழ்நாடு மருந்து விற்பனையில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.