ஜனவரி 18, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய வானிலை (Today Weather) முன்னறிவிப்பில், 19-01-2025 இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather):
20-01-2025 அன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-01-2025 அன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 22-01-2025 முதல் 24-01-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். Rahul Tiky Dies: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்; மாமியார் வீட்டிற்கு சென்ற யூடியூபரின் உயிரை பறித்த எமன்..!
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (19-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
19-01-2025 இன்று தென்தயிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அடுத்த 3 மணிநேரத்திற்கான மழைக்கான வாய்ப்பு:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்பு தொடர்பாக அறிவிப்பு:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 18, 2025