வானிலை: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக (Weather Today) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல தெற்கு ஒரிசா மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தேர்வு எழுத அனுமதிக்காத ஆசிரியர்.. கத்தியால் குத்திக்கிழித்த மாணவன்.. திடுக் சம்பவம்.!
மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு-தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 10, 2025 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

