செப்டம்பர் 20, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாக உள்ளது. வட தமிழகம், தென்தமிழகத்தில் அநேக இடங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையம் பகுதியில் 38 டிகிரி செல்சியசும், கரூர் பரமத்தியில் 20 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
இதனால் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னணுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. Solar Eclipse 2025: 2025ம் ஆண்டுக்கான சூரிய கிரகணம்.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் இதோ.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather):
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோரப் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகள், வங்க கடல் பகுதிகளுக்கு இன்று முதல் 24ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு முதல் 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.