Suriya Kiraganam | Solar Eclipse (Photo Credit: @NDTVWorld X)

செப்டம்பர் 20, சென்னை (Chennai News): 2025 ஆம் ஆண்டில் நான்கு கிரகணங்கள் நிகழும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். அதன்படி, இரண்டு சூரிய கிரகணமும், இரண்டு சந்திர கிரகணமும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாகவே ஒரு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது இந்த ஆண்டின் இரண்டாவது கடைசி மற்றும் இறுதி சூரிய கிரகணம் (Suriya Kiraganam 2025) நடக்க உள்ளது. இந்த சூரிய கிரகணம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த கிரகணத்தின்போதே அமாவாசை நாளும், பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் நாளும் இணைந்துள்ளது. அடுத்த நாளே நவராத்திரி பண்டிகையும் அடுத்த நாளில் தொடங்குகிறது.

இந்தியாவில் சூரிய கிரகணம் (Solar Eclipse India):

இந்த கிரகணம் முழு சூரிய கிரகணம் அல்லாமல் பகுதி அளவு நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைப்பதால் பூமியின் தென்னரைக் கோளப்பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருப்பவர்கள் பார்க்க முடியாது என்றாலும், செப்டம்பர் 21ஆம் தேதி இரவு சுமார் 10:59 மணியிலிருந்து அதிகாலை 03:23 மணி வரை இந்த சூரிய கிரகணம் இருக்கிறது. இதனை நமது நாட்டில் பார்க்க முடியாது. Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?.. ஆரோக்கியம் & ஆன்மீக காரணங்கள்..! 

சூரிய கிரகணத்தை கண்களால் பார்க்கலாமா? (Can i Watch Solar Eclipse)

உலக நேரத்தின்படி மாலை 09:25 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் 07:41 மணிக்கு நடுப்பகுதியை அடைகிறது. இதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்டிகா, தெற்கு பசிபிக் கடலில் உள்ள தீவுகளில் இருந்து மக்கள் நேரடியாக காணலாம். இதனால் சூரிய கிரகணத்தின் போது பூமியின் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து இருக்கும். சூரிய கிரகணத்தின் போது, அதனை நேரடியாக கண்களால் பார்க்க கூடாது. இது ஆபத்தானது. கண்களுக்கு நிரந்தர சேதம் போன்றவையும் உண்டாக்கலாம். கிரகணத்தை பார்க்கும் கண்ணாடிகள் கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்கலாமா? (Can Indians Watch Solar Eclipse September 2025)

செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கும் சூரிய கிரகணம் இரவு 11 மணி அளவில் தொடங்கி, அதிகாலை 03:23 வரையில் இந்திய நேரப்படி நீடிக்கிறது. சூரிய கிரகணம் நிறைவடைந்ததும் நவராத்திரி பண்டிகையும் தொடங்குகிறது. இந்தியாவில் நள்ளிரவு நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுவதால், அதனை நம்மால் பார்க்க முடியாது.