
மார்ச் 15, சென்னை (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நேற்று 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று தொடர்ந்து 5 வது முறையாக விவசாய பணிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு.,
பொதுவான அறிவிப்புகள்:
தமிழ்நாட்டின் இருபோக சாகுபடி பரப்பளவு 33.60 இலட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1.81 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 151 இலட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. பாரம்பரியம், அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு விவசாய துறை புதுமை கண்டுள்ளது. 43000 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய பணிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ.570 கோடி மதிப்பில் 57000 பயணிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கேழ்வரகு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. வேளாண் பட்டதாரிகளை உருவாக்க ரூ.1 இலட்சம் மானியம் 435 இளைஞர்களுக்கு வழங்கப்படும். மன்னுயிர் காப்போம் திட்டத்துக்காக 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்படும். வேளாண் வளச்சியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மொத்தமாக ஊக்கத்தொகைக்காக ரூ.841 கோடி செலவிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2021-2024 வரை வரையில் 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மலைவாழ் விவசாயிகளின் நலனை ஊக்குவிக்க நடவடிக்கை:
இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளை மீட்க ரூ.1631 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.1452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு 30 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.58 கோடி அளவில் பயிர்க்கடன் வழங்கப்படுள்ளது. டெல்டா ல்லாத பிற மாவட்டங்களில் விவசாயிகளுக்காக சிறப்பு தொகுப்பு திட்டம் ரூ.102 கோடி செலவில் செயல்படுத்தப்படும். உழவர்கள் நலமையம் வாயிலாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரையில் மானியம் வழங்கப்படும். நெல் இயந்திர நடவு மானியத்துக்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இலட்சம் ஏக்கரில் கோடை உழவு பணிகளுக்காக ரூ.24000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோடை உழவுத்திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.2000 மானியம் வழங்கப்படும். ரூ.42 கோடியில் 1000 உழவர் நலமையம் அமைக்கப்படும். மலைவாழ் உழவர்களின் முன்னேற்றத்துக்காக ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விருதுநகர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி என பல மாவட்டங்களில் மலைவாழ் உழவர் திட்டம் செயல்படுத்தப்படும். மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.145 கோடி திட்டத்துடன் செயல்படுத்தப்படும். சிற்றூர்களை தன்னிறைவு செய்யும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 12000+ கிராமத்தில், 9 இலட்சம் கிராம விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.269 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மக்காசோள பயிர் 10 இலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் உள்ளவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. TN Budget Session: தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: வெளியான அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
விவசாய பணியாளர்களின் மறைவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு:
ரூ.40 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தி விவசாயிகளின் வருவாய் பெருக்க உதவி செய்யப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு வித்துக்கள் பரப்பை அதிகரிக்க, 2 இலட்சம் ஏக்கரை பரப்பில், 90 ஆயிரம் விவசாயிகள் பயன்படும் வகையில் ரூ.150 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லாத வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு ரூ.2 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. இயற்கை மரணத்திற்கு ரூ.30000 நிதி உதவி வழங்கப்படும். இறுதிச்சடங்கு நிதிஉதவி ரூ.10000 வழங்கப்படும். தரமான, பாரம்பரியம் கொண்ட விதைகள் வழங்க ரூ.52 கோடி வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு தேசிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு, ரசாயன கலப்பை தடுக்க 37 மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.52.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி உழவர்களுக்கு மானியம் 60 - 70 % வரை உயர்த்தப்படுகிறது. மேல்நிலைப்பள்ளி, உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களில் 38000 பேர் வேளாண் சுற்றுலாவுக்கு வழைத்து செல்லப்படுவார்கள். உயர்விளைச்சலை ஊக்குவிக்க ரூ.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நம்மாழ்வார் விருது 3 விவசாயிகளுக்கு தலா ரூ.2 இலட்சம் பரிசு வழங்கப்படும். மாற்றுப்பயிர் சாகுபடிக்கு ரூ12.50 செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். பருத்தி உற்பத்திக்காக ரூ12.21 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். ஜப்பான் உட்பட பிற நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச்ச்செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கரும்பு விவசாயிகளுக்கு அதிரடி அறிவிப்பு:
கரும்பு டன்னுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். கரும்பு விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் திட்டத்துக்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறப்பு ஊக்கத்தொகை காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.3500 அளவில் வருவாய் கிடைக்கும். கரும்பு உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 கோடி ஒத்துஎக்கேடு செய்யப்படுகிறது. 9 இலட்சம் குடும்பங்கள் பலன்பெறும் வகையில், 75% மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்படும். ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்துக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவி செய்யும்.சுமார் 1200 ஏக்கர் பரப்பில் பந்தல் காய்கறிகள் அமைக்கப்படும். தக்காளி, வெண்டை, கீரை போன்ற செடிகள் 75% மானியத்துடன் வழங்கப்படும். 8000 ஏக்கரில் துவரை சாகுபடி ஊக்குவிக்கப்படும். பப்பாளி, கொய்யா, எலுமிச்சை செடிகள் வழங்க 9 இலட்சம் குடும்பத்துக்கு 75 % மானியம் வழங்கப்படும்.
மலர் & தென்னை சாகுபடி:
பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மலர் சாகுபடிக்காக ரூ.8 கோடி, மல்லிகைப்பூ சாகுபடிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு, ரோஜா சாகுபடிக்கு ரூ.1 கோடி செய்யப்படுகிறது. 6000 ஏக்கரில் மலர் சாகுபடியை ஊக்குவித்து, 9000 விவசாயிகள் பலன் பெறுவார்கள். தென்னை மர வளர்ச்சிக்காக, 9800 ஏக்கரில் தென்னை சாகுபடியை உறுதி செய்ய ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இலட்சம் ஏக்கரில் ரூ.1168 கோடி செலவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும். மிளகு, மிளகாய், கிராம்பு சாகுபடியில் ஊக்குவிக்கப்படும். முந்திரி வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும். 2500 ஏக்கர் பரப்பில் இருக்கும் கருவேல மரங்கள் அகற்றப்படும். பலா மேம்பாடு இயக்கத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரமயமாக்களுக்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பனை மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.17 கோடி செலவில் 130 இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். வெண்ணைப்பழம் எனப்படும் பட்டர் புரூட் சாகுபடியை ஊக்குவிக்க 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.