Thangam Thennarasu | TN Budget 2025 (Photo Credit: YouTube / @TNDIPR X)

மார்ச் 14, சென்னை (Chennai News): தமிழ்நாடு பட்ஜெட் 2025 (TN Budget Session 2025), இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நித்தியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஐ தாக்கல் செய்கிறார். மக்கள் பட்ஜெட் 2025 அறிவிப்புகளை தெரிந்துகொள்ளும் வகையில், மொத்தமாக 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 100 இடங்கள், ஏனைய 24 மாநகராட்சிகளில் 48 இடங்கள், 137 நகராட்சி, 274 பேரூராட்சி என 424 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கவிருப்பதால், திமுக அரசு 2021ம் ஆண்டில் இருந்து முழுமையாக தாக்கல் செய்யும் இறுதியான பட்ஜெட் 2025 என்பதும் குறிப்பிட்டக்கது.

தமிழ்நாடு என்றும் சமநிலை தவறாது - அமைச்சர் உறுதி:

இந்நிலையில், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டின் எதிர்கால நலனை மேம்படுத்தும் வகையில் 2025 - 2026 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு செயல்படுகிறது. முன்னோடி திட்டங்களுக்கு அடையாளமாக தமிழ்நாடு திகழ்ந்தது. இருமொழிக்கொள்கையால் தமிழ்நாடு தரணியில் உயர்ந்தது. மனிதநேயம், சமூகநீதி, மகளிர் நலன், மக்கள் முன்னேற்றம், தமிழ் பண்பாடு என நூற்றாண்டுகளாக தமிழ்நாடு முன்னேற்றங்களை தொடருகிறது. இருமொழிக்கொள்கையில் எப்போதும் சமரசம் என்பது கிடையாது. அடுத்துள்ள 25 ஆண்டுகளாக வகையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எவ்வுவு தடைகள் வந்தாலும், தமிழ்நாடு என்றும் சமநிலை தவறாது. செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு:

500 தமிழ் மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். உலகளவில் அனைத்து மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும். 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 193 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 500 தமிழ் இலக்கியத்தை மொழிபெயர்க்க ரூ.10 கோடி, ஓலைச்சுவடி, கையெழுத்து பிரதியை மின்பதிப்பு செய்வ ரூ.2 கோடி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, வெளிநாடுகளில் தமிழ் புத்தகக்கண்காட்சி ஏற்படுத்தப்படும். உலகத் தமிழ் ஒலிம்பியாட்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் அமைக்கப்படும். ஈரோடு நொய்யல் அருங்காட்சியகத்துக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இராமநாதபுரம் நாவாய் அருங்காட்சியகத்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Trichy: தந்தை உயிரிழந்த சோகத்திலும், கண்ணீருடன் தேர்வெழுதிய மாணவி.. திருச்சியில் சோகம்.! 

Minister Thangam Thennarasu (Photo Credit: YouTube)
Minister Thangam Thennarasu (Photo Credit: YouTube)

சென்னைக்கு அருகில் புதிய நகரம்:

அடையாறு ஆரை சீரமைக்க ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பணிகள் 30 மாதத்துக்குள் நிறைவுபெறும். புதிதாக 1 இலட்சம் வீடுகள் அமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை வேளச்சேரி - குருநானக் கல்லூரி சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க ரூ.310 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரக பகுதியில் 25000 வீடுகள் அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருச்சி, மதுரை, ஈரோடு பகுதியில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தூக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதுக்கோட்டையில் கூட்டுகுடிநீர் திட்டத்துக்கு ரூ.1820 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.40 கோடி மதிப்பில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும். ரூ.88 கோடி மதிப்பில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும். நகர்ப்புற நிதிபத்திரம் திட்டத்தின் வாயிலாக ரூ.100 கோடி திருப்பூர் மாநகராட்சிக்கு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் நிர்வாகத்துறைக்கு ரூ.26,688 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் நிலத்தில் புதிய நகரம் உருவாக்கப்படும். மெட்ரோ இரயில் நிலையம், சென்னை நகருடன் இணைப்பு, வணிக வளாகம், மாநாட்டு கூடம், கல்வி நிறுவனங்கள் என தொழில்நுட்ப அம்சத்துடன் கூடிய நகரம் உருவாக்கப்படும். 7 மாவட்டத்தில் ரூ.6688 கோடி செலவில் கூட்டுகுடிநீர் திட்டம் செய்யப்படுத்தப்பட்டு, 30 இலட்சம் மக்கள் பலன் பெறுவார்கள். சென்னையில் குடிநீர் விநியோகத்துக்காக ரூ.2400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.675 கோடி மதிப்பில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்ட தொட்டிகள் அனைத்தும் மறுசீரமைப்பு செய்யப்படும்.

மகளிர் நலன்:

மகளிர் நலன் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.13000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணத்துக்காக ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவில் பெறப்படும். விடியல் பேருந்து பயணத்தின் வாயிலாக நாளொன்றுக்கு 50 இலட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். ரூ.37000 கோடி வரை சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்டும். புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 10000 மகளை உயஉதவி குழுக்கள் ஏற்படுத்தப்படும். புதுமைப்பெண், தமிழ்புத்தவன் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவுபடுத்தப்படும். ஊர்காவல்படையில் திருநங்கைகள் இணைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மதுரை, கோவை, சென்னை நகரங்களில் புதிய மாணவியர் விடுதி அமைக்க ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் வசதிக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். ரூ.77 கோடி மத்தியில் 10 இடங்களில், 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வி & உயர்கல்வித்துறை:

1721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அரசுப்பள்ளியில் உட்கட்டமைமை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.160 கோடி செலவில் 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும். 2676 அரசுப்பள்ளியில் ரூ.65 கோடி செலவில் திறன்மிகு வகுப்பறை தரம் உயர்ப்படும். சமூக நலன் மகளிர் துறைக்காக ரூ.8000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மும்மொழிக்கொள்கை காரணமாக மத்திய அரசு ரூ.2152 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்தது. அதனை தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் இருந்து எடுத்துக்கொள்ளும். மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது. காலை உணவு தஹிட்டத்துக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நான் முதல்வன் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.50 கோட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.46,767 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம், கடலூர், நெல்லை மாவட்டங்களில் 1 இலட்சம் புத்தகத்துடன் கொண்ட புதிய நூலகம் அமைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசுப்பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ் போன்ற பாடங்கள் அறிமுகம் செய்யப்படும். கலை & அறிவியல் பாடப்பிரிவில் 15000 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவத்துறை உட்பட 7.5 இடஒதுக்கீடு திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் அறிவியல் மையம் ஏற்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வகுப்பறை, நூலகம் மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.56 கோடி மதிப்பில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும். சிங்கப்பூர் அறிவியல் மையத்தோடு இணைந்தது, சென்னை நகல் அறிவியல் மையமானது ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.8400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.2500 கோடி அளவில் கல்விக்கடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாணவர்கள் குடிமையியல் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சதுரங்க விளையாட்டை உடற்கல்வி பாடத்திட்டத்தில் இணைந்து கொண்டு வரப்படும். இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரியலூர், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி உட்பட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ரூ.152 கோடி செலவில் அமைக்கப்படும்.

சுகாதாரத்துறை & தொழில்துறை:

சுகாதாரத்துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டத்துக்காக ரூ36 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழிலாளர் நலன்,திறன் துறைக்கு ரூ.1975 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.20000 மானியம் கொடுக்கப்படும். புற்றுநோயை கண்டறியும் கருவி வாங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்ப்படுகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் சோதனமைக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை தரமுயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. செமிகண்டக்டர் உற்பத்தி திறன் & வளர்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஓசூரில் டைடல் பார்க் அமைக்க ரூ.400 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் வாயிலாக 6000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இராமநாதபுரம் - இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளின் வருகையை தென்மாவட்டத்தில் உறுதி செய்ய விமான நிலையம் அமைக்கப்படும். மதுரை, கடலூரில் காலனி தொழிற்பூங்கா ரூ.250 கோடி செலவில் அமைக்கப்பட்டு, 20000 பேருக்கு வேலைவாய்ப்பு அமைக்கப்படும். 10 இலட்சம் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி வங்கிகள் வாயிலாக கடன் கொடுக்கப்படும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.2398 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழில் முதலீடு ஊக்குவிப்புத்துறைக்கு ரூ.3915 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விண்வெளி தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ.1918 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Indian Rupee Symbol: தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. இனி '₹' க்கு பதில் 'ரூ'.. பாஜக கடும் எதிர்ப்பு, திமுக தரப்பு ஆதரவு.! 

நீர்வளம், மின்சக்தி, போக்குவரத்துத்துறைகள்:

ஒருங்கிணைந்த நீர்வளத்துறைக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வியன் திறன்மிகு மையம் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருப்போரூர் பகுதியில் 4000 ஏக்கர் பரப்பில், ரூ.350 கோடி செலவில் நீர் தேக்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். நீர்வளத்துறைக்கு ரூ.9460 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெள்ளநீரை சேமிக்க புதிய நீர் தேக்கங்கள் அமைக்கப்படும். வெள்ளிமலை, ஆழியாறு பகுதியில் புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். புனல்மின் நிலையம் அமைக்க ரூ.11721 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எரிசக்தித்துறைக்கு ரூ.21168 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடல் அரிப்புக்களை தடுக்க, அலையாத்தி காடுகளை பாதுகாக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட, கடல்சார் வள அறக்கட்டளை அமைக்கப்படுகிறது. வேட்டைபறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் 950 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும். போக்குவரதத்துறைக்கு ரூ.1031 கோடி செலவில் புதிதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும். மொத்தமாக போக்குவரத்துத்துறைக்கு ரூ.12900 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.120 கோடி செலவில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும். டீசல் பேருந்துகளை சி.என்.ஜி பெருந்தகை மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னைக்கு 905, கோவைக்கு 75, மதுரைக்கு 100 என மொத்தமாக 1125 மின் பேருந்துகள் வாங்கப்படும். கிண்டியில் ரூ.50 கோடி செலவில் பன்முக போக்குவரத்து மையம் அமைக்கப்படும். பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை டிசம்பர் மாதம் தொடங்கும். சென்னை காஞ்சிபுரம் வேலூர், சென்னை செங்கல்பட்டு விழுப்புரம், கோவை திருப்பூர் ஈரோடு திருச்சி வழித்தடங்களில் ஆர்.ஆர்.டி.எஸ் இரயில் வழித்தடம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்படும். இதற்காக ரூ.9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.9774 கோடி செலவில் கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் செயல்படுத்தப்படும். ரூ.8779 கோடி செலவில் பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புத்துர் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19000 கைவினை கலைஞருக்கு ரூ.74 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறன் துறை அறிவிப்புகள்:

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு 3900 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் 10 ஊராட்சிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை, விருது வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1563 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எம்.பி.சி, பி.சி மாணவர்களின் பள்ளிப்படிப்பு உதவிக்காக ரூ.146 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளி மேற்படிப்புக்காக ரூ.335 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேவாலயம், மசூதி சீரமைப்புக்கு ரூ.10 கோடி நிதி வழங்ப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும் வகையில் புதிய திட்டம் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் நிலத்துறைக்கு ரூ.1434 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதரவற்றோர், தனித்து வாழும் நபர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பம் அடையாளம் காணப்பட்டு, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்துக்கு தாயுமானவன் திட்டத்தின் வாயிலாக முன்னேற்றம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறான குடும்பத்தின் முன்னேற்றம், பள்ளிப்படிப்பு வசதிக்காக மாதம் ரூ.2000 வழங்கப்படும், 50000 குழந்தைகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்படும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோவில் திருப்பணிக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடலோர சுற்றுலா வழித்தடம், மரபுசார் வழித்தடம், இயற்கை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாவை மேம்படுத்த வசதிகள் செய்யப்படும். மீன் & மீனவர் நலனுக்காக குமாரி, நாகை, நெல்லை, இராமநாதபுரம், கடலூர் உட்பட பல இடங்களில் உட்கட்டமைப்பு வசதி செய்லபடுத்தப்படும். இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் நலனுக்காக, படகு உரிமையாளர் நலன்கள் கருதி ரூ.8 இலட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். இலங்கை சிறையில் வாடும் நபர்களின் குடும்பத்திற்கு தினமும் ரூ.350 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது ரூ.500 என உயர்த்தப்படுகிறது. மீன்பிடி தடைகளை உதவித்தொகைக்கு ரூ.341 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொதுப்பணித்துறை, வீட்டுவசதித்துறை, பிற பொது அறிவிப்புகள்:

விலையில்லா வேட்டி, சேலை வழங்க ரூ.673 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கைத்தறி துறைக்கு ரூ.1980 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீட்டுவசதி நகர்புறத்துறைக்கு ரூ.7718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறைக்கு நவீன அடையாளங்களை ஏற்படுத்த ரூ.2457 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 14 புறவழிசாலைகள் ரூ.1700 கோடி செலவில் அமைக்கப்படும். திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட 4 வழிசாலைக்கு ரூ.2100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முன்னாள் படைவீரர்கள் குடும்பத்திற்கு மானிய கடன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் நலனை மேம்படுத்தும் விதமாக, 40000 பணியாளர் இடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். அரசுப்பணியாளர்களுக்காக ரூ.110 கோடி செலவில் குடியிருப்பு இடம் ஏற்படுத்தப்படும். அரசு அதிகாரிகளின் மரணம் காப்பீடு தொகை ரூ.1 கோடி வழங்க முன்வந்துள்ளது. ரூ.10 இலட்சம் வரை கடன் உதவிகள் வங்கிகள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். அரசு அதிகாரிகளின் குழந்தைகள் உயிர்கல்விக்காக ரூ.10 இலட்சம், தனிநபர் வங்கிக்கடன், வீட்டுக்கடன் வாங்குவோருக்கு மானியம் வழங்க, வட்டி % குறைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்காலத்தில் 78882 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 26 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை நகரத்தில் 50 சார்பதிவாளர் அலுவலகம் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும். கோவை மேற்கு புறவழிசாலைக்கு ரூ.348 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடை நிஹியாண்டில் 5 இலட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக மாநகராட்சியில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநிலத்தின் வரி வருவாய் ரூ.2.20 இலட்சம் கோடி ஆகும். தமிழ்நாட்டின் ஜிடிபி-ஐ துல்லியமாக கண்காணிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலத்தின் வரி வருவாய் 14.6 % அதிகரித்து இருக்கும். இந்தியாவில் தமிழ்நாட்டின் வருவாய் பங்கு 9% ஆகும். ஆனால், தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு 4% மட்டுமே வழங்குகிறது. வருவாய்ப்பற்றாக்குறை 1.37% என இருக்கும். மத்திய அரசின் உதவி மானியம் ரூ.23800 கோடி இருக்கலாம். வரும் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.41000 கோடி குறையும்.

முக்கிய அறிவிப்புகள்:

கொரோன தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, அரசு அதிகாரிகளுக்கான ஈட்டிய விடுப்பு மீண்டும் செயல்படுத்தப்படும். 15 நாட்கள் ஈசியா விடுப்பு வகையில் செயல்படுத்திக்கொள்ளலாம். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

மகளிருக்கான உயர்ந்த இடத்தினை சமன் செய்யும் வகையில், 01.04.2025 வரை ரூ.10 இலட்சம் வரை உள்ள அசையா சொத்துக்கள், பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களுக்கு 1% கட்டணம் குறைக்கப்படும். இதனால் மகளிர் சுயசார்பு திறன் மேம்படும். மகளிர் நலன்காக்க சுயஉதவி, மகளிர் உரிமைத்திட்டம், தோழி விடுதி, புதுமைப்பெண் பல திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1 இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக முன்னேற்ற வழிவகை செய்யப்படும். ரூ.2000 கோடி செலவில் 20 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி, கைக்கணினி வரும் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்.