Girl Dies By Heart Attack (Photo Credit: @ChotaNewsTelugu X)

டிசம்பர் 11, ராணிப்பேட்டை (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை அடுத்துள்ள பெல்லியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தோல் மருத்துவர் வசந்தகுமார். இவரது மகள் ஈஷா அத்விதா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று இவர் பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பொழுது திடீரென அருகில் இருந்த மாணவியின் மேல் சரிந்து விழுந்தார். வகுப்பில் இருந்த அனைத்து மாணவியரும் அதனை கண்டு அச்சமடைகின்றனர். பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் விரைவாக வந்து மாணவியை எழுப்ப முயல்கிறார். ஆனால் மாணவியோ உயிரிழந்துள்ளார். வானிலை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

மேலும் மாணவிஅருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் மாணவி இறந்தார் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.