Viral Video (Photo Credit: @thinak X)

அக்டோபர் 18, திருநெல்வேலி (Tirunelveli News): நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு (NEET) தேர்ச்சி பெற, 12ம் வகுப்பு முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் என்ற நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார்.

இந்த மையத்தில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தினமும் தேர்வு, 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு மன அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் சராசரியாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. வானிலை: ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் வெளுக்கப்போகும் மழை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பெயர் சொல்ல விரும்பாத நபர் இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறை சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சக்கணக்கான பெற்றோர்கள் மத்தியில், குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் ஒழுக்கமானவர்களாக வளர்வார்கள் எனும் கருத்து ஆழமாக நிலவி வருகிறது. இதற்குக் காரணம், அடிப்படையிலேயே நாம் எல்லோரும் அடிமை சமூகத்தில் இருந்து வந்தவர்கள். ஒழுக்கத்தை தண்டனை மூலமாக உடனடியாக குழந்தைகள் மீது திணித்துவிடலாம். ஆனால் குழந்தைகளை ஒழுங்குபடுத்த, நிறைய பொறுமையும் நேரமும் தேவை. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட இந்த சமூகமும், நம் அடுத்த தலைமுறையினருக்காக அந்த நேரத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ: