ஆகஸ்ட் 06, கொளத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள கொளத்தூர், விநாயகபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரத்னகுமார். இவரின் மனைவி ராணி. தம்பதிகளுக்கு கீர்த்தி சபரிஷ்கர் (வயது 10) என்ற மகன் இருக்கிறார். சிறப்பு குழந்தையான கீர்த்தி, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சியை கற்கத் தயாராகி இருக்கிறார். கொளத்தூர் பகுதியிலேயே தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் பயிற்சி மையம் செயல்பட்டு வரும் நிலையி, சிறுவனுக்கு ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. Bomb Threat: சென்னை தலைமை செயலகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு பணிகள் தீவிரம்.!
தத்தளித்த சிறுவன்:
நேற்று முன்தினம் மாலையும் சிறுவனுக்கு வழக்கம்போல நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தாய் - தந்தை பயிற்சி மையத்தில் சிறுவனை விட்டு, சிறுவனின் தாய் மகனை அருகில் இருந்து கவனித்து இருக்கிறார். இதனிடையே சிறுவன் ஒருகட்டத்தில் நீரில் மூழ்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய், பயிற்சியாளர் உதவியுடன் சிறுவனை மீட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்:
மீட்கப்பட்ட சிறுவன் மயக்க நிலையிலேயே இருக்கவே, சிறுவனின் பெற்றோர் மகனை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் மரணத்தை உறுதி செய்தனர். இதனால் பெற்றோர் மகனின் உடலை கண்டு கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் பலி, 3 பேர் கைது:
புகாரை ஏற்ற அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நீச்சல்குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் உட்பட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.