ஏப்ரல் 10, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மா நகர், வினோபாஜி நகரில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. உணவகத்திற்கு அருகில் பெட்டிக்கடை ஒன்றும் இருக்கிறது. பெட்டிக்கடைக்கு நேற்று மாலை நேரத்தில் வருகை தந்த இளைஞர்கள் சிலர் சிகிரெட் கேட்டு இருக்கின்றனர். சிகிரெட்டுக்கான பணத்தை கடையின் உரிமையாளர் கேட்டபோது, கடைக்காரரிடம் வாக்குவாதம் நடந்துள்ளது. பின் இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு 09:40 மணியளவில் மீண்டும் கடைக்கு வந்தவர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். Bangalore Women Cheated: சிபிஐ அதிகாரியாக நடித்து நிர்வாண வீடியோ கால் மோசடியில் சிக்கிய இளம்பெண்; ரூ.15 இலட்சத்தை பறிகொடுத்து தவிப்பு.!
ஓசி பொருள் கிடைக்காததால் பணம் செலவழித்து சம்பவம்: இந்த சம்பவத்தில் தவறுதலாக பெட்ரோல் குண்டு ஹோட்டல் மீது விழுந்துள்ளது. இதனால் பதறிப்போன பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வண்ணத்தை காவல் துறையினர் வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். மதுபோதையில் இருந்தவர் இலவசமாக சிகிரெட் தராத காரணத்தால் தகராறு செய்து, பின் நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வரதராஜனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். பிற இளைஞர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு, காயங்கள் ஏதும் இல்லை. உணவகம் லேசான தீ விபத்தில் சிக்கியது.
ஓசி சிகிரெட் கிடைக்காத ஆத்திரத்தில், பெட்ரோல் வாங்கி வந்து, போதையில் தவறுதலாக பெட்டிக்கடைக்கு பதில் ஹோட்டல் மீது கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. நல்லவேளையாக மனித உயிர்களுக்கு காயமோ, சேதமோ இல்லை.