ஏப்ரல் 10, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், 29 வயதுடைய பெண்மணி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஏப்ரல் 03ம் தேதி சர்வதேச அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தாய்லாந்தில் (Women Threatening by Frauds after Captured Skype Naked Video) செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 140 கிராம் போதைப்பொருள் அனுப்பியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சிபிஐ அதிகாரி போல் பேசி மோசடி: உடனடியாக, அழைப்பில் குறுக்கிட்ட ஒருநபர், தன்னை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி என அறிமுகம் செய்து, பெண்ணின் மீது ஆட்கடத்தல் மற்றும் பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளளதாக கூறி இருக்கிறார். இதுகுறித்து வெளியே கூற வேண்டாம் எனவும் எச்சரித்த கும்பல், வழக்கில் இருந்து வெளியே தாங்கள் கூறுவதுபோல நடக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். பயந்துபோன பெண்மணியை செல்போனில் ஸ்கைப் (Skype) செயலி பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். Taiwan Earthquake Shocking Clips: தைவான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; மலைப்பாதையில் நடந்த மரணபயத்தை ஏற்படுத்திய சம்பவம்.. வைரல் காட்சிகள் இதோ.! 

வீடியோ பதிவு செய்து அதிர்ச்சி செயல்: ஸ்கைப் செயலியில் வீடியோ காலில் பெண்ணை தொடர்ந்து 36 மணிநேரம் மிரட்டிய கும்பல், போதைப்பொருள் சோதனை என்று ஆடையை கழற்ற வற்புறுத்தி இருக்கின்றனர். பேசுவது அதிகாரிகளோ? மோசடி கும்பலா? என்ற உண்மை தெரியாமல் பெண்மணி கும்பலின் மிரட்டலுக்கு பயம்கொள்ள, அவர்கள் பெண்ணின் நிர்வாணா வீடியோவை பதிவு செய்துள்ளனர். பின் அதனை டார்க் வெப் எனப்படும் இணையத்தில் விற்பனை செய்ய்யபோவதாக மிரட்டி ரூ.15 இலட்சம் பணம் கேட்டுள்ளனர்.

கூடுதலாக பணம் கேட்டு தொடர் மிரட்டல்: பதறிப்போன பெண்மணியும் மிரட்டலுக்கு பயந்து ரூ.15 இலட்சம் பணம் அனுப்பி வைக்க, மீண்டும் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கூடுதலாக ரூ.10 இலட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனால் நிலைமையை உணர்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்திற்கும் தெரியவந்துள்ளதால், இவ்வாறான மோசடிகளை செய்வோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது மேற்கூறிய செய்தித்தொகுப்பு.