Prison Arrest File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, கோவை (Covai): கோவை அடுத்த தொட்டிபாளையம் பிரிவு அண்ணா நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது24). இவர் நேற்று முன்தினம், சின்னியம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு பாஸ்கர் சென்று கொண்டிருந்துள்ளார். சிறிது தூரம் சென்ற போது அங்குள்ள பள்ளி அருகே உள்ள காலி இடத்தில் பைக்கை நிறுத்துமாறு அந்த வாலிபர் கூறியுள்ளார்.

அவர் பைக்கை நிறுத்தியதும் அங்கு மறைந்திருந்த அந்த வாலிபரின் கூட்டாளிகள் 4 பேர் வந்து, பாஸ்கரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து, அவரிடமிருந்த செல்போன், ரூ.5 ஆயிரம் பணம், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்னர். இதனால், அதிர்ச்சியடைந்த பாஸ்கர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிந்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். 17 Arrested In Chennai: புரசைவாக்கத்தில் பரபரப்பு.. ஒரு வாரத்தில் 17 பேர் கைது..!

அதேநேரம், செல்வபுரத்தை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் மாதேஸ்வரன் நேற்று காந்திபுரம் பாரதியார் சாலையில் டூவீலரில் சென்றபோது நபர் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறிய பின் நண்பர் ஒருவருக்கு அவசரமாக போன் செய்ய வேண்டும் என போனை கேட்க அவரும் கொடுத்துள்ளார். அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பேச்சு கொடுத்து அவரிடம் மற்றொரு மொபைலை பறித்து தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் இஸ்மாயில், தட்சிணாமூர்த்தியை கைதுசெய்தனர். இந்த கும்பலுக்கும், மற்ற கும்பலுக்கும் சம்பந்தம் உள்ளதா, அல்லது இவர்கள் தனியா, என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.