மார்ச் 07, சிதம்பரம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த, காவல்துறையினர் கண்காணிப்பு சமீபகாமாகவே தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கஞ்சா விற்பனை கும்பல் ஒன்று, மாணவர்களை தாக்கி, கஞ்சா விற்பனை செய்ய வற்புறுத்தும் அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஆபாச புகைப்படம், வீடியோ பார்த்தால் கடும் நடவடிக்கை.. 13 ஆயிரம் பேருக்கு காவல்துறை எச்சரிக்கை..!
அதிர்ச்சி வீடியோ வைரல்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் (Chidambaram) பகுதியில், சிதம்பரம் - சீர்காழி சாலையில் அரசு ஐடிஐ கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐ-கல்லூரியில் (ITI College Students) பயின்று வரும் மாணவர்கள் சிலரை, கஞ்சா விற்பனை (Ganja Smuggling Gang) கும்பல், கஞ்சா விற்பனையை செய்ய வேண்டும் என மிரட்டி தாக்குதல் நடத்தி நடத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்த வீடியோ காவல்துறையினரின் கவனத்திற்கு செல்லவே, சிதம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறை விசாரணை & நடவடிக்கை:
விசாரணையில், உள்ளூரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் சிவா, வினோத் குமார் ஆகியோர் மாணவர்களை தாக்கியது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், வீடியோ பதிவு செய்து வெளியிட்ட விமல்ராஜை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மாணவர்களை தாக்கி கும்பல் சிரித்து மகிழ்ந்தும், மாணவர்கள் அலறுவதும் தொடர்பான காட்சிகள் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
மாணவர்கள் கஞ்சா விற்பனை கும்பலால் தாக்கப்படும் காட்சி:
``Ganja விக்க மாட்டீயாடா?’’ - Students-க்கு நரக டார்ச்சர்.. கதறி அழுத கொடூர காட்சிகள்#ganja #students pic.twitter.com/jpx9CbJGmD
— Thanthi TV (@ThanthiTV) March 7, 2025