ஏப்ரல் 29, ஸ்ரீமுஷ்ணம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவர் சம்பவத்தன்று அங்குள்ள பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த கும்பலை ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தோப்பில் தலைமறைவான நபர்: இதனிடையே, ஜேசுதாஸின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், "நீதான் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்ததை காவல்துறையிடம் சொல்லியவனா? உன்னை வெட்டாமல் விடமாட்டோம்" எனக்கூறி மிரட்டி இருக்கின்றனர். இதனால் பயந்துபோன ஜேசுதாஸ், நாச்சியார்பேட்டை பகுதியில் இருக்கும் தோப்பு ஒன்றில் மறைந்துக்கொண்டுள்ளார். HC Judgement on Mentally Challenged Girl Rape: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விருப்பத்துடன் உடலுறவு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த கும்பலுக்கு துணைபோன காவல்துறை? இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் தொடர்புகொண்டவர், தான் பேசும் ஆடியோவை பதிவு செய்தவாறு அதிகாரிகளிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். உடனடியாக இவ்விவகாரத்தை குறித்துக்கொண்ட அதிகாரிகள், ஜேசுதாஸை மீட்க உதவி செய்தனர். ஜேசுதாஸ் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரியிடம் பேசும்போது, "ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் எனது செல்போன் நம்பரை சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பலுக்கு வழங்கி இருக்கின்றனர். அதனால் அவர்கள் என்னை தேடுகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர்: இந்த விசயத்திற்கு விளக்கம் அளித்துள்ள ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர், "ஜேசுதாஸ் சம்பவத்தன்று கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த கும்பலிடம் சென்று இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். அவர்கள் மதுபானம் தர மறுத்த காரணத்தால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் காவல்துறையினர் மீது அவதூறு பரப்பு நோக்குடன் செயல்பட்டு இருக்கிறார்" என தெரிவித்தனர்.
பிளாக்கில் சரக்கு விற்பவரை போலீசிடம் போனில் புகார் கொடுத்தேன்.. புகார் கொடுத்த என்னையே சரக்கு விற்பவரிடம் போலீஸ் போட்டு கொடுத்ததால் அவர்கள் கத்தியுடன் அலைவதால் பயத்தில் தலைமறைவாக இருக்கிறேன்.. ஆடியோவால் அம்பலம்..#Cuddalore | #Police | #Liquor #Audio | #ViralAudio #PolimerNews pic.twitter.com/Az9qj3AymU
— Savukku Shankar Army (@Mahi1987Mass) April 29, 2024