Mumbai HC Judgement on Mentally Challenged Girl Rape Case (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை (Mumbai) சேர்ந்த 23 வயது இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்டு தனது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனால் பெண்ணின் வயது 23 வயது எனினும், அவர் 9 வயது குழந்தை போல குணம் கொண்டவர் ஆவார். பெண்ணுடன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 24 வயது இளைஞர் பழகி வந்துள்ளார். இளைஞர் தொடக்கத்தில் நல்லெண்ணத்துடன் பழகினாலும், பிற்காலத்தில் பெண்ணின் (Mentally Challenged Girl Rape Case Judgement) மீதான பார்வை திரும்பி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மகளின் பலாத்காரத்தை அறிந்த பெற்றோர்: இதனால் பெண்மணி கர்ப்பமாகவே, அவரின் பெற்றோர் மருத்துவமனையில் மகளை அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டாலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நடந்த விசாரணையில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நெருங்கியதும், அதனால் அவர் கர்ப்பமானதும் உறுதி செய்யப்பட்டது. கருக்கலைப்பு செய்யப்பட்ட சிசுவின் மாதிரியிலும் இளைஞர் மற்றும் பெண்ணின் மரபணுக்கள் ஒத்துப்போயுள்ளன. Earthquake In Indonesia: நெருப்பு வளையத்தின் மோதிரம் என வருணிக்கப்படும் பகுதிகள்: இந்தோனேசியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்; அச்சப்படவைக்கும் தகவல்.! 

இளைஞர் தரப்பு வாதம்: தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்து குற்றவாளிக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இளைஞரின் தரப்பில் தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், எங்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த எதிர்ப்புக்கு இருவரும் வெவ்வேறு மதம் என்பதே காரணம் என்பதால், வழக்கில் இருந்து 24 வயது இளைஞரை விடுவித்து உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பு: இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நட்பாக பழகியது, அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல பழகியது நல்மனம் உடையோரின் தனிசிறப்பு எனினும், 23 வயதாகினும் மனநலத்தால் 9 வயதுக்கு ஒப்புடைய குணம் கொண்டவரை பலாத்காரம் செய்தது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதற்கு எத்தகைய வாதம் முன்வைக்கப்பட்டாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆகையால் இளைஞரின் கோரிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.