Dead Body (Photo Credit: Pixabay)

ஜூன் 21, கொடைக்கானல் (Dindugal News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், கீழ்மலை கிராமம், பண்ணைக்காடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அங்குள்ள கும்பரை பகுதியில் வசித்து வரும் பிரியா என்ற மாணவி பயின்று வந்தார். இதனிடையே மாணவி வழக்கம்போல நேற்று மதியம் உணவு சாப்பிட்டுள்ளார்.

திடீரென மயங்கிய மாணவி :

அப்போது திடீரென மயக்கமடைந்து இருக்கிறார். இதனால் அவரை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். Chennai News: லாரி சக்கரத்தில் சிக்கி தாயின் கண்முன் சிறுமி பலி.. பள்ளிக்கு செல்லும்போது சோகம்.! 

இறப்பின் காரணம் என்ன?

இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் கிடைக்கும் அறிக்கையை பொறுத்து மேற்படி விசாரணை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.