ஜூன் 20, சென்னை (Chennai News): சென்னை கொளத்தூரில் உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில் வசித்து வருபவர் யாமினி. இவரின் 10 வயது மகள் சௌமியா. சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். தினமும் மகளை யாமினி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று பின் மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை யாமினி மகளை பள்ளியில் விடுவதற்காக பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
சிறுமி உடல்நசுங்கி மரணம் :
அச்சமயம் சாலையின் குறுக்குப்பகுதியில் இருந்து வாகனம் ஒன்று வந்ததால், சாலையோரம் சென்று கொண்டிருந்த யாமினி தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது இவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி அதிவேகத்தில் (Chennai Girl Death) பக்கவாட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி சௌமியா மீது தண்ணீர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி (Child Death) உயிரிழந்தார். Gold Rate Today: இன்றைய தங்கம் விலை அதிரடி குறைவு.. விவரம் உள்ளே.!
சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு :
தாயின் கண்முன்னே மகள் துள்ளத்துடிக்க பரிதாபமாக (Road Accident) இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் தொடங்கினர். தற்போது தண்ணீர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் 100 நாட்களுக்குள் லாரியின் உரிமையாளரிடம் ஒப்படைக்க கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இனி கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதனை உரிய முறையில் கண்காணிக்காத காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.