ஜனவரி 27, எழும்பூர் (Chennai News): சென்னையில் உள்ள சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து, எழும்பூர் நோக்கி சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி சபீனா பேகம், தனது 7 வயது மகனை தவறவிட்டார். கூட்டத்தில் சிறுவன் தனியே சென்ற நிலையில், அவரை காணாது பரிதவித்துப்போன பெண்மணி, சிறுவனை சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.
குழந்தை தடுமாறிப்போனார்:
இதுதொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், சென்னை இரயில்வே காவல்துறையினரும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சபீனா, தனது 7 வயது மகனுடன் கேரளா மாநிலத்தில் வேலைக்கு செல்ல வந்துள்ளார். சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வந்தவர்கள், அங்கிருந்து எழும்பூர் செல்லும்போது, இரயில் நிலைய வளாகத்தில் குழந்தையை தவறிவிட்டது தெரியவந்தது. Chennai Shocker: பாழடைந்த கட்டிடத்தில் பகீர்.. 3 சிறுமிகள் காதலர்களால் பலாத்காரம்.. சென்னையை நடுங்கவைக்கும் சம்பவம்.!
யாசகம் பெற வரும் கும்பல்:
மேலும், சிறுவனை 2 பேர் சேர்ந்து அழைத்துச் செல்வதும் சிசிடிவி கேமிராவில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து, தொடர்ந்து சிறுவனை ஆந்திராவில் வைத்து மீட்டனர். மேலும், சிறுவனை வைத்திருந்த சரஸ்வதி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கும்பலாக சேர்ந்து யாசகம் பெற வருவோர், இங்குள்ள பகுதிகளை நோட்டமிட்டு வருகின்றனர்.
பெண் குழந்தைகளை திட்டமிட்டு கடத்தல்:
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, சென்ட்ரல், ராயபுரம் என பல பகுதிகளுக்கு செல்லும் கும்பல் குழந்தைகளை நோட்டமிட்டு கடத்தி செல்வது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் இந்த கும்பல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பல் குறிப்பாக பெண் குழந்தைகளை பெரும்பாலும் கடத்தி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.