ஜூன் 19, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் (Kallacharayam) விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராய தடுப்புப்பிரிவு காவல் துறையினர், அவ்வப்போது வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் (Illicit Liquor Death in Kallakurichi) காய்ச்ச பயன்படுத்தப்படும் உரல்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். எனினும், திரைமறைவில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுரேஷ், பிரவீன் என்ற உறவினர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக தெரியவருகிறது. இதேபோல சேகர் என்பவர் உட்பட 4 பேர் மொத்தமாக நேற்று இரவு கள்ளச்சாராயம் அருந்தி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தினமும் வேலைக்கு சென்று, எவ்வித உடல்நலக்குறைவு இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். Pawan Kalyan as Deputy CM of Andhra Pradesh: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்..!
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு பலி:
இதனிடையே, இன்று காலை மேற்கூறிய நால்வரும் தங்களின் வீடுகளில் தனித்தனியே உடல்நலக்குறைவை சந்தித்துள்ளனர். மேலும், கண்கள் தெரியவில்லை, காது கேட்கவில்லை என்று கூறி இருக்கின்றனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் இவர்களை அனுமதி செய்தனர். அங்கு இவர்களின் மரணம் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்களின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். Pokkiri Re Release: விஜய் ரசிகர்களே கொண்டாடட்டத்துக்கு தயாரா? - ரீரிலீஸ் செய்யப்படும் "போக்கிரி" - ட்ரைலர் இதோ.!
பலியானோரின் குடும்பத்தினரிடம் விசாரணை:
இதுமட்டுமல்லாது, அப்பகுதிகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதியான காரணத்தால், காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து விசாரணை தொடங்கி இருக்கின்றனர். தற்போது வரை மேற்கூறிய 3 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நேரடியாக உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களின் தரப்பில் புகார்கள் பெறவும் பேசி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி சாமசிங் மீனா உறுதி செய்துள்ளார். மேற்படி விசாரணை மற்றும் களநிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உறவினர்கள் குற்றசாட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், அங்கு கல்வராயன் மலைப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அழித்து வருகின்றனர். சமீபத்தில் கூட பல்லாயிரம் லிட்டர் கொண்ட கள்ளச்சாராய உரல்கள் அழிக்கப்பட்டன. கடந்த 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் வரை உயிரிழந்து இருந்தனர். உயிரிழந்தவரின் உறவினர்கள் கள்ளச்சாராயம் குடித்து வந்தவர்கள் பல உடல்நலக்குறைவை கூறி வலியால் கதறி மரணமடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.