Sniffer Dog Astro (Photo Credit: @ANI X)

ஜனவரி 18, மத்திய சிறைச்சாலை (Madurai News): தமிழ்நாடு காவல்துறையில், மக்களின் பாதுகாப்புக்காகவும், போதைப்பொருள், வெடிகுண்டு உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்களை கண்டறிந்து மக்களை காக்கவும், நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மத்திய சிறையில் (Madurai Central Prison), ஆஸ்ட்ரோ என்ற மோப்ப நாய் (Dog Astro), கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது. காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் பணிப்பிரிவில், டிஎஸ்பி எனப்படும் நாய் காவல் பணிகள் (Dog Service Police) பிரிவில் இருந்த ஆஸ்ட்ரோ, தனது 10 வயதில் இயற்கை எய்தியது.

21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்:

இதனையடுத்து, காவல்துறை மரியாதைப்படி நாயின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை சிறைக்குள் கஞ்சா உட்பட போதை வஸ்துக்கள் அதிகம் உணவியபோது, மோப்ப நாய் ஆஸ்ட்ரோ அதனை கண்டுபிடித்து கொடுத்து மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. லேப்ரடார் ரக ஆஸ்ட்ரோ, கடந்த 2015 அக் 07 முதல் பணியில் இருக்கிறது. பிறந்த 10 மாதத்திற்குள்ளாகவே சிறப்பு பயிற்சி பெற்ற ஆஸ்ட்ரோ, பண்புள்ள நாயகவும் கவனிக்கப்பட்டு இருக்கிறது. Rain Alert: இன்று 6 மாவட்டங்களில் கனமழை; சென்னையிலும் இடி-மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.! 

சோதனையில் இனி சிக்கல்?

சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில், உரிய மரியாதை செலுத்தப்பட்டு அஸ்ட்ரோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மோப்ப நாய் அர்ஜுனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது ஆஸ்ட்ரோவும் உயிரிழந்துள்ள காரணத்தால், சிறை வளாகத்தில் சோதனைகள் செய்வது சிரமத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி இருக்கிறது. ஆஸ்ட்ரோ மண்ணில் புதைத்து வைக்கப்படும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களையும் கண்டறியும் தன்மை கொண்டது ஆகும்.