ஏப்ரல் 23, பெங்களூர் (Bangalore News): வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் கடத்தி வர நினைக்கும் சர்வதேச அளவிலான மாபியா கும்பல், பல்வேறு விதமான பொருள்கள் மற்றும் உயிரினங்களை விமானங்கள் வழியே கடத்தி வருவது தற்போது தொடர்கதையாகி இருக்கிறது.

தாய்லாந்துசென்று திரும்பிய இளைஞரின் அதிர்ச்சி செயல்: அப்பாவி மக்களை குறிவைக்கும் கும்பல், பயணிகளை கேடயமாக வைத்து சில நேரம் அவர்களை சிக்கலில் ஆழ்த்திவிடுவதும் உண்டு. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச (Kembegowda International Airport) விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கிலிருந்து விமானம் ஒன்று வந்தது. Carrot Coconut Laddu: தித்திக்கும் இனிப்பில் கேரட், தேங்காய் லட்டு செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..! 

இந்த விமானத்தில் வருகை தந்த பயணி ஒருவர், தனது கைப்பைக்குள் பத்து அனகோண்டா பாம்புகளை கடத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் செயல்பட, அதனைத்தொடர்ந்து அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

10 அனகோண்டா பறிமுதல் & விசாரணை: அவரிடம் இருந்த பைக்குள் அதிகாரிகள் பார்த்தபோது, 10 அனகோண்டா (Anaconda Smuggling India) பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த பாம்பை வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் மீட்டனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தாய்லாந்து நாட்டிலிருந்து அனகோண்டா இங்கு கடத்தி வரப்பட்டதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள கும்பல் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.