ஜனவரி 27, புதுக்கோட்டை (Pudukkottai News): இன்றளவில் உள்ள குழந்தைகள் பலரும், கடைகளில் விற்பனை செய்யப்படும் நொறுக்குதீனிகளுக்கு அதிகம் அடிமையாகி இருக்கின்றனர். குழந்தையின் அழுகையை நிறுத்த, அவர்களை மகிழ்ச்சிப்படுத்த என பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்றவை அதிகம் வாங்கி கொடுக்கப்படுகின்றன. இதனை சாப்பிடும் குழந்தைகள், பின்னாளில் அதுவே தனக்கு வேண்டும் என அடம்பிடித்து வாங்குகிறது. நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!
நபர்ட்டி வாங்கி கொடுத்தார் (Nabati Wafer Biscuit Worm):
அவ்வப்போது, இவ்வாறான நொறுக்குத்தீனிகள் தரமும் கேள்விக்குறியாகி, அவற்றின் காலாவதி தேதி முடிவதற்குள் புழுக்கள் நெளியும் சம்பவமும் நடக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் பெண்மணி, தனது குழந்தைகள் ஆசையாக கேட்கிறது என்று நபர்ட்டி வாங்கி சாப்பிட கொடுத்துள்ளார். நபர்ட்டியை குழந்தைகள் ஆவலுடன் சாப்பிட முற்பட்டு இருக்கிறது.
புழுக்கள் நெளிந்தன:
அதனை கடித்து சாப்பிட்டபோது சுவை மாறுதலாக இருந்து, கீழே துப்பி இருக்கின்றன. இதனை கவனித்த தாய் நபார்டியை பிரித்து பார்த்தபோது, அதில் புழுக்கள் நெளிந்து காணப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி அதனை வீடியோ பதிவு செய்தவாறு, உணவுப்பாதுப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். மேலும், பெற்றோர் குழந்தைகளுக்கு இனி நபாடி வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் வீடியோவில் பெண் தனது கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
நபாட்டியில் புழுக்கள் நெளிந்ததாக கூறப்படும் காணொளி:
குழந்தைகள் உண்ணும் திண்பண்டமான நபாட்டி வேஃபர் பிஸ்கட்டில் இருந்த புழு..! அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை..#Pudukkottai | #nabati | #WaferBiscuit | #worm pic.twitter.com/02u1nINMDF
— Polimer News (@polimernews) January 26, 2025
வீடியோ நன்றி: பாலிமர் டிவி